கமலும் சீமானும் கூட்டணி வைத்தால் மாபெரும் சக்தியாக இருக்கும் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசிய கருணாஸ் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்து அதிமுகவை கைப்பற்றுவது போல் வெளியான ஆடியோ குறித்த கேள்விக்கு முதலில் சசிகலா அரசியலுக்கு வரட்டும் பின்னர் பேசலாம் என பதிலளித்தார்.
மேலும் கருணாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்:
என்னைப் பொருத்தவரை உண்மையிலேயே தமிழகத்தின் மீது அக்கறையும் தமிழக மக்களளுடைய உரிமை காக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை உடையவர்களாக சீமான் அவர்களும், பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் இருக்கக்கூடிய காரணத்தினால் எதிர்காலத்தில் அவர்கள் இணைந்து செயல்படுவது என்பது மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை என தெரிவித்தார்