• vilasalnews@gmail.com

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு திமுகவில் கடும் போட்டி - தென்மாவட்டங்களுக்கு ஒதுக்க ஒலிக்கும் கழகக்குரல்கள்!

  • Share on

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என தெரிகிறது. மூன்று பதவிகளையும் திமுகவே கைப்பற்றும் என்பதால் அக்கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ராஜ்யசபா எம்.பி., யாக இருந்த முகம்மது ஜான் கடந்த மார்ச் மாதத்தில் மரண மடைந்தார். அவரது பதவி காலியாக உள்ளது. அவரது பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் உள்ளன.

அதேபோல், அதிமுக ராஜ்யசபா எம்.பி., க்களான கே.பி.முனுசாமி, வைத்தியலிங் கம் ஆகியோர் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,க்கள் ஆகிவிட்டனர். இதனால், இருவரும் தங்கள் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில் வைத்தியலிங்கம் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டும், முனுசாமி பதவி காலம் முடிய 5 ஆண்டுகளும் உள்ளன.

தற்போது காலியாக உள்ள மூன்று இடங்களுக்கும் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் விரைவில் தேர்தல் நடத்தப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மூன்று பதவிகளுக்கும் தனித்தனியே தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என திமுக சார்பில் தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள மூன்று எம்.பி., பதவிகளுக்கும் பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள திமுகவுக்கு கிடைக்கவே வாய்ப்பு உள்ளதால் அப்பதவியை பெற திமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மூன்று  ராஜ்யசபா எம்.பி., பதவிகளை  தென் மாவட்டங் களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும், அதேவேளையில் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத மற்றும் கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்து வருபவர்களுக்கே அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தென் மாவட்டத்திலிருந்து கழகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.  

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில், நடந்து முடிந்த 6 சட்டசபை தொகுதிகளில் கோவில்பட்டி  தவிர மீதி 5 சட்டசபை தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுகவும், ஸ்ரீவைகுண் டம் தொகுதியில் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து  அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோரை அமைச்சர்களாக்கி தூத்துக்குடி மாவட்டத்திற்கு  இரண்டு அமைச்சர்களை தந்திருப்பது மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு உற்றாசகத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், தூத்துக் குடி மாவட்டத்தை சேர்ந்தோருக்கு டெல்லியில் பிரதிநிதித்துவம் இல்லா மல் இருப்பது கவலையளிப்பதாகவும், ஆகவே, காலியாக உள்ள மூன்று எம்.பி., பதவிகளில் ஒன்றையாவது தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவருக்கு ஒதுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்புகின்றனர்.


கடந்த 2015 ல் தூத்துக்குடி மதிமுக மாவட்ட செயலாளராக இருந்த ஜோயல், அண்ணா அறிவாலயத்தில் அப்போ தைய திமுக தலைவர் கருணா நிதி மற்றும்  மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து அவருக்கு திமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பதவி கட்சியில் வழங்கப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரியசாமி, அனிதா ராதா கிருஷ்ணன் என இரு மாபெரும் அரசியல் துருவ சக்திக்கு முன்பு தம்மால் மதிமுகவில் இருந்தது போன்ற ஜோயல் என்ற தனித்துவ அடையாளத்தோடு அரசியல் செய்யக் கூடிய சூழல் இருக்காது என்பதை உணர்ந்த ஜோயல், தன்னுடைய அரசி யல் ஈடுபாடு நடவடிக்கைகளை திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினோடு நெருக்கத்தை ஏற்படுத்தி அதற்கேற்றார் போல் சென்னையில் சூழல தொடங்கினார்.


அதிமுக, அமமுக, ஆகியவற்றில் இருந்து சமீபத்தில் விலகி வந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியும் , செந்தில் பாலாஜிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கி அமைச்ச ராக்கியும், அதிமுக வில் இருந்து விலகி வந்த மார்க்கண்டேயனுக்கு விளாத்தி குளம் தொகுதியில் வாய்ப்பு வழங்கி சட்டமன்ற உறுப்பினராக்கி அடையாளப் படுத்தி கௌரவித்திருக்கும் திமுக தலைமை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஓர் இளம் துடிப்பு மிக்க மாவட்ட செயலாள ராகவும், கருஞ்சிறுத்தை என கட்சியின ரால் வர்ணிக்கப்பட்டு சுறுசுறுப்பு ஆற்றலோடு விளங்கிய ஜோயலுக்கு தற்போது வரை எந்தவொரு மக்கள் பிரதிநியாகும் வாய்ப்பை திமுக தலைமை வழங்காமல் இருப்பது ஜோயலுடைய ஆதரவு மற்றும் அனுதாபிகளிடையே வருத்தம் தருவதாக கூறப்படுகிறது. எனவே, காலியாக உள்ள  மூன்று எம்.பி., பதவிகளில் காலியாக உள்ள ஒன்றை வழக்கறிஞர் ஜோயலுக்கு ஒதுக்கிட தலைமை முன் வர வேண்டும் என்ற குரல் தென்மாவட்ட திமுகவில் இருந்து ஒலிக்க தொடங்கியிருக்கிறது.


அதே போல், தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நூற்றாண்டுகளாக மாவட்ட செயலாளராக இருந்து கட்சியை வளர்த்து அமைக்கப்பட்ட கட்டமைப்பானது இனி வரும் ஆண்டுகளிலும் அவ்வாறே தொய்வின்றி தொடர அவரது வாரிசான திமுக பொதுக்குழு உறுப்பினர் என்.பி. ஜெகன் பெரியசாமிக்கு காலியாக உள்ள  மூன்று எம்.பி., பதவிகளில் ஒன்றை திமுக தலைமை வழங்கி மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு கூடுதல் வேக கழக உணர்வு இரத்த ஓட்ட பாய்ச்சலை தர வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட திமுக கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விரும்புகின்றனர்.

மொத்தத்தில் காலியாக உள்ள மூன்று எம்.பி., பதவிகளில் ஒன்றையாவது தென்மாவட்டத்திற்கு, அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த ஒருவருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாவட்ட திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்கிருந்து ஒலிக்கப்படும் கழகத்தினரின் குரல்களுக்கு திமுக தலைமை செவிசாய்க்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


  • Share on

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று எம்பிக்கள் பதவிக்கு தேர்தல் எப்போது?

பிற மாநிலங்கள் பெட்ரோல் வரியைக் குறைக்கும்போது தமிழக அரசால் முடியாதா?: டிடிவி தினகரன்

  • Share on