• vilasalnews@gmail.com

அ.தி.மு.க - பா.ஜ.க சேர்ந்திருப்பது தி.மு.க கூட்டணிக்குத்தான் பலம்!’ - திருநாவுக்கரசர் எம்.பி

  • Share on

`தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலில் தமிழகம் முழுவதும் பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்பது குறித்து சர்வே எடுக்க வேண்டும்' என திருநாவுக்கரசர் எம்.பி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டைக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் : `தமிழக முதல்வரும் அமைச்சர்களும் செல்லும் கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவாதா? எதிர்க்கட்சித் தலைவர், பிரமுகர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தைத் தடைசெய்வது, அவர்களைக் கைதுசெய்வதெல்லாம் கண்டனத்துக்குரியவை.

தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசு விழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சிகளைச் சாடி அரசியல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அது மரபையும் மீறியது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலில் தமிழகம் முழுவதும் பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா என்பது குறித்து சர்வே எடுக்க வேண்டும். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி அமைத்திருப்பது என்பது தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாகவே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பலம் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது.

கூட்டணி பேச்சுவார்த்தையின் போது எண்ணிக்கை குறித்துப் பேசுவோம். தேர்தலின்போது, மூன்றாவது அணி, நான்காவது அணி என்று உருவாவது சகஜம்தான். ஆனாலும், போட்டி என்பது தி.மு.க கூட்டணிக்கும், அ.தி.மு.க கூட்டணிக்கும்தான். தமிழகத்தில் யாரும் சாதி, மதம் பார்த்தெல்லாம் வாக்களிப்பதில்லை" என்றார்.

  • Share on

பாஜக - அதிமுக கூட்டணியால் ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல் : அமைச்சர் சாடல்

சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும்- மு.க.அழகிரி

  • Share on