• vilasalnews@gmail.com

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று எம்பிக்கள் பதவிக்கு தேர்தல் எப்போது?

  • Share on

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தலை தனித்தனியாக நடத்தவேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தனித்தனியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று சொல்வதற்கான காரணம் என்ன?

மாநிலங்களவையில் மூன்றில் ஒரு பங்கு எம்பிக்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடைகிறது.

அவ்வாறு முடிவடையும் எம்பி பதவிகளுக்கு அவ்வப்போது இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவது வழக்கம். மாநிலங்களவையில் தமிழ்நாட்டிற்கு 18 எம்பிக்கள் உள்ள நிலையில் தற்போது மூன்று இடங்கள் காலியாக உள்ளன.

அதிமுக எம்பி முகமது ஜானின் மறைவை அடுத்தும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற வைத்தியலிங்கம், கேபி முனுசாமி ஆகியோர் தங்கள் எம்பி பதவிகளை இராஜினாமா செய்ததாலும், காலியான 3 பதவிகளுக்கும் தனித்தனியே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் திமுக கேட்டுக்கொண்டுள்ளது.

மறைந்த முகம்மது ஜானின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வைத்தியலிங்கத்தின் பதவிக்காலம் 2022 ஜூன் யிலும், கேபி முனுசாமியின் பதவிக்காலம் 2026 ஏப்ரல் உடனும் முடிவடைகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 147 இன் படி மாநிலங்களவைக்கான தற்காலிக காலியிடங்கள் தனித்தனியான தேர்தல் மூலம் நிரப்பப்பட வேண்டும் என திமுக தெரிவித்துள்ளது.

மாநிலங்களவைத் தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அடிப்படையில் நடைபெறுகிறது. இதன்படி 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் ஒரு அளவீடு மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த அளவீட்டின் அடிப்படையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 59 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இதன்படி மூன்று காலியிடங்களுக்கான தேர்தலை சேர்த்து நடத்தினால் இரண்டு இடங்களை திமுகவும் ஒரு இடத்தை அதிமுக வாலும் கைப்பற்ற முடியும். தனித்தனியாக நடத்தினால் மூன்றையும் திமுகவால் கைப்பற்ற முடியும் என்பதால் இதனை அதிமுக விமர்சித்துள்ளது.

அமித்ஷா ஸ்மித்தி ராணி உள்ளிட்டோர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் வகித்த மாநிலங்களவை இடங்கள் காலியான போது தனித்தனியாகத்தான் நிரப்பப்பட்டன.

தமிழகத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தேர்தல் ஆணையம் என்ன முடிவு  எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • Share on

பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு திமுகவில் கடும் போட்டி - தென்மாவட்டங்களுக்கு ஒதுக்க ஒலிக்கும் கழகக்குரல்கள்!

  • Share on