சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்த சசிகலா அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தான்அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார் சசிகலா. அதிமுக தேர்தலில் தோற்று விட்டால் மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதற்கு தான் சசிகலா இந்த சதித் திட்டத்தை திட்டுவதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அது, இப்போது உண்மையாகி விட்டது.
எனினும், சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என ஈபிஎஸ் திட்டவட்டமாக கூறுவதால், சசிகலா மீண்டும் கட்சியில் இணைவாரா இல்லையா என்பது புரியாத புதிராகவே உள்ளது.
இதனிடையே, அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசுவது போன்ற ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாவது அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, நேற்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்தாலோசித்த ஓபிஎஸ் – ஈபிஎஸ், சசிகலாவுடன் பேசுபவர்களை கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றினர். அதன் படி சசிகலாவிடம் தொலைபேசியில் பேசியவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சசிகலா தேனியைச் சேர்ந்த தொண்டரிடம் பேசிய 44வது ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், ஓபிஎஸ் அவராகத் தான் ராஜினாமா செய்தார்.
அப்படி செய்திருக்காவிட்டால் அவரை தான் முதல்வராக அமர வைத்து இருப்பேன் என சசிகலா கூறுகிறார். அதிமுகவில் நடைபெறுவதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா விடமாட்டேன் என்றும் கூறுகிறார்.