பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது.
காணொளி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அப்போது, பிரதமர் மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, தீபாவளி வரையில் ரேஷனில் உணவு தானியங்கள் இலவசம் உள்ளிட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவிருக்கின்றனர்.
மேலும், 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3வது அலையில் சிக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது