திருமண வெப் சைட் மூலம் பல பெண்களை ஏமாற்றி பாலியல் கொடுமை செய்த என்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் மும்பை மலாட் பகுதியை சேர்ந்த 32 வயதான கரண் குப்தா என்பவர், அங்குள்ள ஒரு சாதாரண நிறுவனத்தில் மெக்கானிக் கல் என்ஜினியர் ஆக பணியாற்று கிறார். இவர் பிரபலமான ஒரு தனியார் திருமண வெப் சைட்டில் தான் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுவதாக பொய் சொல்லி, வெவ்வேறு பெயர்களில் ,வெவ்வேறு முகவரி கொடுத்து பதிவு செய்துள்ளார் .அப்போது அவர் தனக்கு நல்ல மணப்பெண் தேடுவதாக கூறியுள்ளார்.
தான் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக பொய் தகவல் கொடுத்துள்ளார் . அதை பார்த்த பல பெண்கள் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர் பல பெண்களை பல பெயர்களில் பல இடங்களில் சந்தித்து அனைவரையும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காமித்துள்ளார்.
பின்னர் அந்த பெண்களை பாலியல் கொடுமையும் செய்துள்ளார். இப்படியாக அவர் பல செல்போன் நம்பர் மற்றும் சிம்கார்டுகளை பயன்படுத்தி 12க்கும் மேற்பட்ட பெண்களை பல பப், ஹோட்டல் போன்ற இடங்களில் சந்தித்து ஏமாற்றியுள்ளார். இன்னும் பல பெண்கள் அவர் மீது புகார் கொடுக்க உள்ளார்கள்.
இதுவரை வந்த புகாரின் பேரில் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளார்கள். அவரை காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் .