உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமாகத் திகழும் கோல் இந்தியா நிறுவனம் அடுத்த 4 வருடத்தில் அதாவது 2024ஆம் ஆண்டுக்குள் சுமார் 5,650 கோடி ரூபாய் அளவிலான முதலீடு செய்து 14 சோலார் மின்சார உற்பத்தி தளங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கோல் இந்தியா அதிகளவிலான செலவுகளைக் குறைக்க முடியும் என நம்புகிறது. இந்தத் திட்டத்தைக் கோல் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து NLC நிறுவனமும் இணைந்து கட்டமைக்க உள்ளது.
இந்த மாபெரும் திட்டத்தில் மூன்றில் 2 பங்கு நிதியைக் கோல் இந்தியா நிறுவனம் முதலீட்டுச் செய்ய முடிவு செய்துள்ள நிலையில் மீதமுள்ள தொகையை NLC நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இக்கூட்டணி rooftop மற்றும் ground-mounted சோலார் பேனல் அமைப்பதன் மூலம் சுமார் 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
5,650 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் 14 சோலார் திட்டத்தின் மூலம் கோல் இந்தியா நிறுவனத்தின் மின்சாரப் பயன்பாட்டுக்குச் செலவு செய்யப்படும் பெரும் தொகை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் கோல் இந்தியாவின் செலவுகளில் 4.4 சதவீதம் மின்சாரப் பயன்பாட்டு மட்டு
2023 - 2024ஆம் ஆண்டுக்குள் கோல் இந்தியா சுமார் 1 பில்லியன் டன் அளவிலான நிலக்கரியை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்குத் தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் கோல் இந்தியா உருவாக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு உள்ளது. கடந்த 20 வருடத்தில் முதல் முறையாகக் கோல் இந்தியாவின் உற்பத்தி அளவீடுகள் 2019-20ல் 603 மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே உற்பத்தி செய்து, உற்பத்தியில் சரிவைக் கண்டது.
இதோடு கோல் இந்தியா நாட்டின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிறுவனமான NTPC நிறுவனத்துடனும், Solar Energy Corporation of India நிறுவனத்துடனும் தனிப்பட்ட முறையில் தலா 1000 மெகாவாட் மின்சாரத்தைத் தத்தம் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யத் தனி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியா தற்போது மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டில் பெரிய அளவிலான மாற்றங்களைச் சந்திக்கத் தயாராகியுள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் தற்போது புதுப்பிக்கத்தக்கச் சக்தி என அழைக்கப்படும் renewable energy-ஐ உற்பத்தி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளது.