மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் காப்பீட்டுக் கழக கணக்கில் இருந்து (இ.எஸ்.ஐ.சி.) அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் அந்த ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உயிரிழந்த தொழிலாளரை சார்ந்துள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் ஓய்வூதிய தொகை வழங்கப்படும். அதற்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.சி. வலைதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினரின் விவரங்களையும் அவர் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் அத்தொழிலாளர் இ.எஸ்.ஐ.சி. கணக்கில் குறைந்த பட்சம் 78 நாட்களுக்கு வரவு வைத்திருக்க வேண்டும்.
நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த தொழிலாளர்கள் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தால், அவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு தினசரி ஊதியத்தில் சுமார் 90 சதவீதமானது ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது