இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியீடு.
இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனோ இரண்டாவது அலை காரணமாக மத்திய அரசாங்கம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைத்து முன்கள பணியாளர்களும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாநிலங்களில் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகின்றனது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் நோய்தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்கள், விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நேற்றை விட இன்று இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது என கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரம் :
- 1,73,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- 2,84,601 பேர் குணமடைந்துள்ளனர்
- 3,617 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் விவரம் :
- 2,77,29,247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 2,51,78,011 பேர் குணமடைந்துள்ளனர்.
- 3,22,512 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 22,28,724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை நாட்டில் 20,89,02,445 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.