• vilasalnews@gmail.com

" உன்னோட நிர்வாண போட்டுவை லீக் பண்ணி இருக்காங்க " பதறியடித்து பார்த்த இளைஞர்!

  • Share on

கணவனை பழிவாங்குவதற்காக, மனைவி அவருடைய ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த ஒரு இளைஞரின், நண்பர் பதறிக் கொண்டு போன் செய்து, உன்னுடைய நிர்வாண புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் லீக் ஆகியுள்ளது. மேலும், பல புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன அந்த இளைஞர் உடனே இன்ஸ்டாகிராமுக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது அந்த இளைஞரின் பெயரிலேயே ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் அந்த இளைஞரின் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளதைப் பார்த்து அதிர்ந்து போனார். இதையடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து நடந்த விசாரணையில், இளைஞரின் மனைவிதான் இந்த செயலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இருவரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், இருவருக்கும் திடீரென மனக் கசப்பு ஏற்பட்டுள்ளது. அது நாட்கள் செல்ல செல்ல, சிறிய சண்டையில் ஆரம்பித்து பெரிய சண்டையில் சென்று முடிந்தது. இதையடுத்து இரண்டு ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் படி சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவரின் பெயரில் பல அக்கவுண்ட்களை ஓபன் செய்துள்ளார்.

அதன் பின், அதில் கணவனின் ஆபாச புகைப்படங்களைப் பதிவிட்டு வந்துள்ளார். திருமணம் ஆன புதிதில், கணவனுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அவர் மட்டும் இருக்கும் புகைப்படங்களைப் பதிவு செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

  • Share on

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பு...! முழு விவரம்...!

  • Share on