• vilasalnews@gmail.com

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு வாரத்தில் 23% சரிவு: உலக சுகாதார அமைப்பு தகவல்

  • Share on

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 23 சதவீதம் குறைத்து ள்ளது. இருந்தும் உலகளவில் அதிகளவு பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது' என, உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் கொரோனவில் புதிதாக பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை சரிந்துள்ளது. உலகளவில் புதிதாக 41 லட்சம்பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர்; 84 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தொற்றில் 14 சதவீதமும், உயிரிழப்பில் 2 சதவீதமும் முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.617 வகை வைரஸ் தற்போது உலகளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன.

பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன. பி.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், பி.1.617.2 வகை உருமாற்ற வைரஸ் 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் பி.1.617 வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் கவலைக்குரியதாக இருக்கிறது. இந்த வகை வரைஸ் அதிகமாகப் பரவும் சக்தி கொண்டதா கவும், நோயின் தீவிரத்தை அதிகப்படு த்துவதாகவும் உள்ளது.

கடந்த 7 நாட்களில் இந்தியாவில் 18 லட்சத்து 46 ஆயிரத்து 55 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர் இது 23 சதவீதம் குறைவாகும். பிரேசிலில் 4.51 லட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர் இது 3 சதவீதம் குறைவாகும்.

இந்தியாவில் கடந்த வாரத்தில் 28,292 பேர் உயிரிழந்தனர். 10 லட்சம் பேருக்கு 2.1 பேர் உயிரிழந்தனர். இது 4 சதவீதம் அதிகமாகும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

அதிக மரணங்களை ஏற்படுத்தும் கொரோனா 2ம் அலை! நாடு முழுவதும் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

  • Share on