• vilasalnews@gmail.com

360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் தனியொருவராக துபாய்க்கு பறந்த பயணி!

  • Share on

மே 19ம் தேதி மும்பையிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட 360 இருக்கைகள் கொண்ட போயிங்777 ரக விமானத்தில் மும்பையைச் சேர்ந்த பாவேஷ் ஜாவேரி, 40, தனியொருவராக பயணித்துள்ளார். இவர் தனது விமானப் பயணத்துக்கு ரூ.18,000 மட்டுமே கட்டணமாக செலுத்தியுள்ளார்.

பரபரப்பான இரண்டு விமான நிலையங்களை இணைக்கும் இந்த விமான சேவையை அன்றாடம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால், தற்போது கொரோனா காரணமாக பயணத் தடை விதிக்கப்பட்டி ருப்பதால், ஒரு போயிங் விமானத்தில் பயணம் செய்ய ஒரே ஒரு பயணி மட்டும் முன்பதிவு செய்திருந்தார். விமான சேவை நிறுவனமான எமிரேட்ஸ், அந்த ஒரு பயணிக்காக விமானத்தை இயக்கியுள்ளது.

'மும்பையிலிருந்து துபாய்க்கு போயிங் விமானத்தை இயக்க ரூ.8 லட்சம் மதிப்புள்ள 17 டன் எரிபொருளை செலவாகும். இந்த ஒரே ஒரு பயணி இல்லை என்றாலும், இந்த விமானம் இயக்கி இருப்போம். ஏனென்றால், துபாயிலிருந்து மும்பை வரும் பயணிகளுக்காக மறுமார்கத்தில் இந்த விமானம் இயக்க வேண்டும்' என, விமான சேவை நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Share on

130 நாட்களில் 20 கோடி தடுப்பூசி: உலக அளவில் இந்தியா 2ம் இடம்

அதிக மரணங்களை ஏற்படுத்தும் கொரோனா 2ம் அலை! நாடு முழுவதும் 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு

  • Share on