• vilasalnews@gmail.com

130 நாட்களில் 20 கோடி தடுப்பூசி: உலக அளவில் இந்தியா 2ம் இடம்

  • Share on

நாடு முழுவதும் 130 நாட்களில் 20 கோடி தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறுகிய காலத்தில் அதிக பேருக்கு தடுப்பூசி போட்ட நாடுகளில் பட்டியிலில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஜனவரி 16ம் தேதியில் இருந்து 130 நாட்களில் 20,06,62,456 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதில் 4,35,12,863 பேர் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர். நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட 42 சதவீதம் பேர், 45 வயதுக்கு மேற்பட்ட 34 சதவீதம் பேருக்கும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க 124 நாட்களில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியது. அதற்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. அடுத்தபடியாக பிரிட்டனில் 168 நாள்களில் 5.1 கோடி டோஸ், பிரேசிலில் 128 நாள்களில் 5.9 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு ள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share on

நாடு முழுவதும் 11,717 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு

360 இருக்கைகள் கொண்ட விமானத்தில் தனியொருவராக துபாய்க்கு பறந்த பயணி!

  • Share on