கொரோனாவால் இறந்தவரின் உடலில் 24 மணி நேரம் மட்டுமே வைரஸ் இருக்கும் என்றும், கொரோனாவால் உயிரிழந்தவர் களின் உடலை எரித்த சாம்பல் மூலம் தொற்று பரவாது என்றும் தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் மருத்துவமனையின் தடய அறிவியல் துறையின் தலைவர் சுதிர் குப்தா.
அவர் மேலும், கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலில் மூக்கு மற்றும் தொண்டை யில் 12 மணி முதல் 24 மணி நேரத்திற்கு மேல் வைரஸ் தொற்று உயிருடன் இருக்காது என்பதை கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்றினால் உயிரிழந்த100பேரின் உடலை பரிசோதனை செய்ததன் மூலமாக இது தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்த ஒருவரிடன் உடலில் இருந்து வேறுஒருவரின் உடலுக்கு தொற்று பரவ வாய்ப்பில்லை என்கிறார். அதுமட்டுமல்லாமல், கொரோனா வால் உயிரிழந்தவர்களை முழுவதுமாக எரித்த பின்னர் அந்த சாம்பலினாலும் தொற்று பரவ வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.