கொரோனா 2வது அலையில் இந்தியாவில் 420 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம்(ஐஎம்ஏ) தெரிவித்து உள்ளது.
முன்னதாக கடந்த வாரம் 2வது அலையில் சிக்கி நாடு முழுவதும் 270 டாக்டர்கள் உயிரிழந்ததாக ஐஎம்ஏ கூறியிருந்தது. அதில், அந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் கேகே அகர்வாலும்(65) அடக்கம்.
முதல் அலையின் போது நாடு முழுவதும் 748 டாக்டர்கள் உயிரிழந்தது, ஐஎம்ஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. இந்த அமைப்பில் 3.5 லட்சம் பேரின் தகவல்கள் பராமரிக்கப் படுகின்றன. ஆனால், நாடு முழுவதும் 12 லட்சம் டாக்டர்கள் உள்ளனர்.
நேற்று வாரணாசியில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுடன் வீடியோ கான்பரன்சில் உரையாடிய பிரதமர் மோடி, அனைத்து முயற்சிகளையும் தாண்டி, கொரோனாவின் தாக்கம் மிகப்பெரியதாக உள்ளது. நமக்கு நெருக்கமான பலரை கொரோனா பறித்து கொண்டுவிட்டது என கண்கலங்கியபடி பேசினார்.
இந்நிலையில், ஐஎம்ஏ., வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்தியாவில், கொரோனாவின் 2வது அலையில் டில்லியில் 100 டாக்டர்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் 420 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.