• vilasalnews@gmail.com

கறுப்பு பூஞ்சை தொற்றை தொடர்ந்து வெள்ளைப் பூஞ்சை தொற்றும் கண்டுபிடிப்பு!

  • Share on

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் 4 பேருக்கு அதை விட ஆபத்தான வெள்ளைப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பூஞ்சைகளால் ஏற்படுகிற அரிதான நோய் தான் கறுப்பு பூஞ்சை தொற்று. இது, பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய் கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாகிறது. 'மியூகோர்மைகோசிஸ்' ( Mucormycosis ) என்று அழைக்கப்படுகிற கறுப்பு பூஞ்சை நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இத்தொற்று ஏற்பட்டால் முகம், கண் கீழ்ப்பகுதியில் வலி, வீக்கம், மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறி காணப்படும். இது குணப்படுத்திவிடக்கூடிய நோய் தான்.

நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் தரப்படுகின்றன. அவை நுரையீரல் வீக்கத்தை குறைப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஏற்படுத்தும் சேதங்களை தடுக்கின்றன. அப்போது நோய் எதிர்ப்புச்சக்தியை குறைத்து, ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து விடுகின்றன. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனால் மியூகோர்மை கோசிஸ் பிரச்சினைக்கு ஆளாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கறுப்பு பூஞ்சையை விட மோசமான வெள்ளை பூஞ்சை தொற்று பீகாரின் பாட்னாவில் பதிவாகியுள்ளன. பிரபல மருத்துவர் உட்பட நால்வருக்கு வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நுரையீரல் மட்டுமின்றி நகங்கள், தோல், வாய் வயிறு, சிறுநீரகம், மூளை, பிறப்புறுக்களையும் பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இத்தொற்றுக்கு சிகிச்சையளிக்க லிபோசோமால் ஆம்போடெரிசின் பி அல்லது எல்.ஏ.எம்.பி., எனப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்து பயன்படுகிறது. மும்பையைச் சேர்ந்த பாரத் சீரம் மற்றும் தடுப்பூசிகள் நிறுவனத்தின் இம்மருந்தை பயன்படுத்த கடந்த மார்ச் மாதமே இந்திய மருந்து கட்டுப் பாட்டாளர் ஒப்புதல் தந்துள்ளார். நரம்பு வழியாக செலுத்தப்படும். ஒரு டோஸின் விலை ரூ.3,500. இதனை தினசரி வீதம் எட்டு வாரங்களுக்கு போட வேண்டி யிருக்கும் என்கின்றனர்.


  • Share on

"பதற்றத்தை உருவாக்கும் சைரன் ஒலி வேண்டாம்" - அரசு உத்தரவு!

50 சதவீதம் பேர் மாஸ்க் அணிவதில்லை

  • Share on