• vilasalnews@gmail.com

"பதற்றத்தை உருவாக்கும் சைரன் ஒலி வேண்டாம்" - அரசு உத்தரவு!

  • Share on

கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி இந்திய மக்கள் திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டுகிறது. உயிரிழப்புகள் புதிய உச்சத்தைத் தொடுகின்றன.

ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமலும் தடுப்பு மருந்துகள் இல்லாததாலும் மக்களின் அவலக் குரல்கள் காதைக் கிழிக்கின்றன. இது ஒருபுறம் என்றால் இறந்தவர்களைப் புதைக்க முடியாதபடி மயானங்களில் பிணங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இதனால் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு எங்கு காணினும் ஆம்புலன்ஸ்கள் காணப்படுகின்றன. முக்கிய நகரங்கள் ஆம்புலன்ஸ்களால் நிறைந்துள்ளன. மக்களின் அவலக்குரல் ஒருபுறம் கேட்டால், நகரங்கள் முழுவதும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலி ஒருவித பீதியை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் பொதுமக்கள் அனைவரும் மனதளவில் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

இதைத் தவிர்க்கும் பொருட்டு மணிப்பூர் மாநில அரசு ஆம்புலன்ஸ் இயக்குவோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “ஆம்புலன்ஸ்களின் சைரன் ஒலி பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பீதியை உருவாக்குகிறது. மேலும் இப்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் வாகன நெரிசலும் இல்லை. எனவே, ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரனை இனி ஒலிக்க வேண்டாம். சாலைகள் மூடப்பட்டிருந்தாலோ அல்லது வாகன நெரிசல் இருந்தால் மட்டுமே சைரனை ஒலிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

  • Share on

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவருக்கு புதிய வைரஸ் தொற்று - முதல் பலி

கறுப்பு பூஞ்சை தொற்றை தொடர்ந்து வெள்ளைப் பூஞ்சை தொற்றும் கண்டுபிடிப்பு!

  • Share on