• vilasalnews@gmail.com

காஷ்மீரில் விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

  • Share on

காஷ்மீரில் விபத்தில் இறந்த கோவில்பட்டி ராணுவ வீரர் உடல் அடக்கம் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான கருப்பசாமி (34), காஷ்மீர் லடாக் பகுதியில் வாகனத்தில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் இறந்தார். அவரது உடல் புதுடெல்லியில் இருந்து நேற்று மதியம் விமானத்தில் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரையில் கருப்பசாமியின் உடலுக்கு ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் அவரது உடலை சொந்த ஊரான தெற்கு திட்டங்குளத்துக்கு ராணுவ வாகனத்தில் கொண்டு வந்தனர். வழிநெடுகிலும் ஏராளமானவர்கள் திரண்டு வந்து கருப்பசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாலையில் தெற்கு திட்டங்குளத்தில் உள்ள கருப்பசாமியின் வீட்டுக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி தமயந்தி, குழந்தைகள், பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். கருப்பசாமியின் உடலுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தெற்கு திட்டங்குளம் கிராம மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கருப்பசாமியின் உடலை ராணுவ வாகனத்தில் ஏற்றி இறுதி ஊர்வலமாக தெற்கு திட்டங்குளம் மயானத்துக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கருப்பசாமியின் உடலுக்கு கமாண்டர் நரேந்திர சிங் தலைமையில் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி  ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். கருப்பசாமியின் உடலில் போர்த்தப்பட்டு இருந்த தேசியக்கொடியை அவரது மனைவியிடம் ராணுவ வீரர்கள் ஒப்படைத்தனர். பின்னர் 8 ராணுவ வீரர்கள் வானத்தை நோக்கி தலா 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து அரசு மரியாதையுடன் கருப்பசாமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

  • Share on

100 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்கு திருடி செல்லப்பட்ட அன்னபூரணி சிலை, இந்திய தூதரகத்திடம் ஒப்படைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு_பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறப்பு

  • Share on