• vilasalnews@gmail.com

100 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்கு திருடி செல்லப்பட்ட அன்னபூரணி சிலை, இந்திய தூதரகத்திடம் ஒப்படைப்பு

  • Share on

வாரணாசி கோயிலில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்கு திருடிச் செல்லப்பட்ட அன்னபூரணி சிலை இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பீடத்தில் அமர்ந்த நிலையில் கையில் பெரிய கிண்ணத்தையும் மற்றொரு கையில் அன்னம் வழங்கும் கரண்டியும் வைத்திருப்பது போன்று அன்னபூரணி சிலை அமைந்துள்ளது.

கடந்த 1913-ம் ஆண்டு வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு கோயிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டுள்ளது  என ஆய்வாளரும், கலைஞருமான மெஹ்ரா தெரிவித்துள்ளார்.

கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மெக்கென்ஸி அருங்காட்சியக கலைக்கூடத்தில் இருந்த சிலை தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • Share on

உத்தரபிரதேசத்தில் பசுவதை, கால்நடைகள் கடத்தலை வெற்றிகரமாக தடுக்கிறோம் - முதல் அமைச்சா் யோகி ஆதித்யநாத்

காஷ்மீரில் விபத்தில் இறந்த ராணுவ வீரர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

  • Share on