உத்தரபிரதேச மாநிலத்தில் பசுவதை மற்றும் கால்நடைகள் கடத்தலை தனது அரசு வெற்றிகரமாக தடுத்து வருவதாக முதல் அமைச்சா் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசுகையில், “நான் உத்தரப்பிரதேச முதல்-மந்திரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு பசுக்கள் மற்ற நாடுகளுக்கு கடத்தப்பட்டன. இந்த புனித விலங்கை பாதுகாப்பது எனக்கு சவாலாக இருந்தது.
நான் எனது முழு திறனையும் செலுத்தி இதனை சாத்தியமாக்கி உள்ளேன். பசுவதை மற்றும் கால்நடைகள் கடத்தலை எங்களால் வெற்றிகரமாக தடுக்க முடிகிறது. அரசு சார்பில் நடத்தப்படும் கோசாலைகளில் 5 லட்சத்து 24 ஆயிரம் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.