இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஹேர் ஸ்டைல் அப்போது ரொம்ப பிரபலம். அவரது ஹேர் ஸ்டைலை அன்றைய பாகிஸ்தான் அதிபரே புகழ்ந்திருக்கிறார்.
அந்த அளவுக்கு பிரபலமான தோனியின் ஹேர் ஸ்டைல் என்னாச்சு என்று தெரியவில்லை. மொட்டை தலையுடனும், துறவி போன்று ஆடை உடுத்தி அமைதியாக உட்கார்ந்திருப்பது போலவும், அவரது முன்பு சீடர்கள் அமர்ந்திருப்பது போன்றும் போட்டோக்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.
அவரது இந்த புகைப்படத்தினை பகிர்ந்துள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ‘தோனியின் புதிய அவதாரம்’ என்று குறிப்பிட்டுள்ளது.