• vilasalnews@gmail.com

மார்பகங்களை தொடுவது பாலியல் குற்றமில்லையா? உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

  • Share on

மார்பகங்களை தொடுவதும், பைஜாமா நாடாவை அவிழ்ப்பதும் பாலியல் குற்றமாகாது என்று சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் தற்போது கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.


போக்சோ வழக்கு ஒன்றில், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, மார்பகங்களை தொடுவதும், பைஜாமா நாடாவை அவிழ்ப்பதும் குற்றம் ஆகாது என்று தீர்ப்பு வழங்கியிருந்தார்.


கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 வயது சிறுமி தனது உறவினர் வீட்டில் இருந்து, தனது வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது, இரண்டு இளைஞர்கள் சிறுமிக்கு லிப்ட் தருவதாக கூறி பைக்கில் அமர வைத்திருக்கின்றனர். சிறுமியை வீட்டில் விடுவதற்கு பதிலாக வாய்க்கால் பகுதிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். 


அங்கு வைத்து அவர்கள் சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறார்கள். சிறுமி அலறவே அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வரவே, இளைஞர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர். 


இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். சிறுமியின் மார்பகங்களை அநாகரீகமாக தொட்டிருக்கிறார்கள் என்றும், பாலியல் வன்கொடுமைக்காக பைஜாமாவின் நாடாவை அவிழ்த்திருக்கிறார்கள் என்றும் புகார் பதிவாகி உள்ளது.


புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்த போலீஸ், காஸ்கஞ்ச் சிறப்பு நீதிமன்றத்தின் முன் அவர்களை ஆஜர்படுத்தியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து இளைஞர்கள் தங்கள் மீதான வழக்குக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கு நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா முன்பு விசாரணைக்கு வந்தது.


விசாரணையில், இளைஞர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் மீது பதியப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்வதாகவும், அதற்கு பதிலாக தாக்குதல் மற்றும் நிர்வாண படுத்துதல் உள்ளிட்ட குற்றங்களுக்கான பிரிவில் வழக்குப்பதிவு செய்வதாகவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு நீதித்துறையை தாண்டி பொது வெளியிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.


இதனையடுத்து விஷயம் சீரியஸாவதை உணர்ந்த உச்சநீதிமன்றம் விவகாரத்தை தானாக முன் வந்து கையில் எடுத்தது. நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். விசாரணையில், உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு மனிதாபிமானமற்றது. அவர் உணர்ச்சியற்ற நிலையில் இருக்கிறார். நீதிபதிக்கு எதிராக இப்படி தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவதற்காக நாங்கள் வருந்துகிறோம் என்று அமர்வு கூறியிருக்கிறது. 


அமட்டுமல்லாது இந்த வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

  • Share on

எம்பிக்களின் சம்பளத்தில் மாற்றம்... ஒவ்வொரு எம்பிக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா!

  • Share on