• vilasalnews@gmail.com

எம்பிக்களின் சம்பளத்தில் மாற்றம்... ஒவ்வொரு எம்பிக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா!

  • Share on

மத்திய அரசு அனைத்து எம்பிக்களுக்கும் சம்பளத்தை உயர்த்தியுள்ளது. எம்பிக்களின் சம்பளம் மற்றும் முன்னாள் எம்பிக்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.


இந்திய நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் கட்டம் நடந்து வருகிறது. இதில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனைகள் நடந்து வருகிறது. இதற்கிடையே, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தமிழக எம்பிக்கள் மும்மொமொழி கல்வி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


இதற்கிடையே, மத்திய அரசு அனைத்து எம்பிக்களுக்கும் சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், முன்னாள் எம்பிக்களின் ஓய்வூதியத்தையும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. எம்பிக்களின் சம்பளம், தினசரி அலவன்ஸ் மற்றும் ஓய்வூதியங்களை சுமார் 24 % உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


அதன் படி, இதுவரை எம்பிக்கள் மாதம் சம்பளமாக ஒரு லட்ச ரூபாய் வாங்கி வந்தனர். எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், எம்பிக்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாக அதிகரிக்கும். மேலும், தினசரி அலவன்ஸும் ரூ.2,000 லிருந்து ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே போல், முன்னாள் எம்.பி.க்களின் மாத ஓய்வூதியம் ரூ.25,000 இருந்து ரூ.31,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய எம்பிக்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியமும் மாதம் ரூ.2,000 இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணவீக்கக் குறியீட்டின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், அலவன்ஸ்கள் மற்றும் ஓய்வூதியச் சட்டத்தின் கீழ் சம்பளம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தந்தையின் மறைவுக்கு பின் ஓய்வூதிய பலன்கள் பெற பெண் பிள்ளைகளுக்கு உரிமை வழங்கல்

மார்பகங்களை தொடுவது பாலியல் குற்றமில்லையா? உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

  • Share on