• vilasalnews@gmail.com

ஒரே வாரத்தில் வழுக்கையான தலை : முடி உதிர்வதால் 3 கிராம மக்கள் பீதி

  • Share on

இளம்பிள்ளைகள் முதல், வயதானவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என எல்லோரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை முடி உதிர்வு. 


சில நாள்களுக்கு நன்றாக முடி வளரும் திடீரென்று முடி உதிரத் தொடங்கிவிடும். இதற்கு காரணம் என்னவென்றே புரியாது. பலவித எண்ணெய் வகைகள், ஷாம்பூ போன்றவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவார்கள். முடி உதிர்வுக்கு மன அழுத்தம், சீரான பராமரிப்பின்மை, மரபணு, ஊட்டச்சத்துக் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும், மகாராஷ்டிராவில் ஒரே வாரத்தில் 3 கிராம மக்கள் வழுக்கை தலையானதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. 


மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் ஷேகான் தாலுகா உள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் போர்கான், கல்வாட் மற்றும் ஹிங்னா என்ற கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் திடீரென அதிக அளவு முடி கொட்டி பலர் வழுக்கை தலைக்குமாறினார்கள். ஆண், பெண் என்று இல்லாமல் அனைத்து தரப்பினரும் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டனர்.


இதனால், கிராமங்களில் பெரும் பீதி ஏற்பட்டது. இறுதியில் ஆய்வுக்கு வந்த சுகாதார அதிகாரிகள், உரங்களால் ஏற்படும் நீர் மாசுதான் பெருமளவில் முடி உதிர்தலுக்கு காரணம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும், கிராமங்களில் உள்ள தண்ணீரின் மாதிரிகள் மற்றும் கிராம மக்களின் தலைமுடி மற்றும் தோல் மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

  • Share on

இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலமானர்!!

  • Share on