இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் தில்லியில் இன்று வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 92.
கடந்த 1932ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த மன்மோகன் சிங், நிதியமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார கொள்கை மாற்றங்களை ஏற்படுத்தினார். 1991-1996 வரையிலான பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தில் மன்மோகன் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்த காலத்தில்தான் புதிய பொருளாதார கொள்கை இந்தியாவில் முதன் முதலாக அமல்படுத்தப்பட்டது.
1991ஆம் ஆண்டு முதல் முதலாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மன்மோகன் சிங், 1998 முதல் 2004 வரை எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார். 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார் மன்மோகன்சிங்.
இந்தநிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் தில்லியில் இன்று ( டிசம்பர் 26 ) வியாழக்கிழமை காலமானார்.