பெங்களூரில் காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்க முயன்ற 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள அத்திபெலே பகுதியை சேர்ந்தவ 30 வயதாகும் ஹாரீஷ் மற்றும் ஹேமந்த் 2 பேருக்கும் டிகிரி படிப்பை முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 2 பேருக்கும் பெண் தோழிகள் உள்ளனர். இருவருக்கும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் அவர்களுக்கு இந்த விபரீத ஆசை வந்துள்ளது.
அதாவது ஹாரீஸ் மற்றும் ஹேமந்த் ஆகியோர் தங்களது காதலிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் திட்டமிட்டு தங்களின் காதலிகளுடன் அவர்கள் வெளியே செல்லும்போது நெருக்கமாக இருப்பதை அவர்களுக்கு தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் காதலிகளை மாற்றி உடலுறவு வைப்பது பற்றி சம்பந்தப்பட்ட பெண்களிடம் கூறியுள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் பெண் காதலிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பின்னர், இதுதொடர்பாக ஹாரீஸின் காதலியான இளம்பெண் "சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாரீசுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. டேட்டிங் மற்றும் பார்ட்டிகளில் சேர்ந்து பங்கேற்றோம். இருவரும் உடலுறவு வைத்து கொண்டோம். அப்போது அவர் எனக்கு தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
இப்போது அதனை காட்டி மிரட்டி நண்பருடன் படுக்கையை பகிரும்படி கட்டாயப்படுத்துகிறார். இதற்கு கைமாறாக ஹேமந்த் அவரது காதலியை ஹாரீசுடன் உடலுறவு வைக்க அனுமதிக்க உள்ளதாக கூறுகிறார் என்று பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி ஹாரீஸ் மற்றும் ஹேமந்த் ஆகியோரை கைது செய்துள்ளனர்.