• vilasalnews@gmail.com

தொகுதியின் ஒரே இந்து வேட்பாளர்.... 30 ஆண்டுகளுக்குப் பின் தொகுதியை கைப்பற்றிய பாஜக!

  • Share on

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட்  மாநில சட்டமன்ற தேர்தலுடன், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. 


இதில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் 7 தொகுதிகளில் பாஜக கூட்டணியும், 2 தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. 


இந்த இடைத்தேர்தல் முடிவுகளில் குந்தர்கி சட்டமன்ற தொகுதி தனி கவனம் பெற்றுள்ளது. காரணம், இந்த தொகுதி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக  வசிக்கும் தொகுதியாகும். எனவே, இந்த தொகுதியில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளராக இஸ்லாமியர்களையே களமிறக்கியது. 


சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உள்பட 11 வேட்பாளர்களும் இஸ்லாமியர்களையே  களமிறங்கிய நிலையில், பாஜக மட்டும் ராம்வீர் சிங் தாகூர் என்ற இந்துவை வேட்பாளராக களமிறக்கியது. 


பாஜக வேட்பாளர் ராம்வீர் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகள் முழுவதும் நேரடியாக சென்று அந்த சமுதாய கூட்டங்களில் பங்கேற்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். அத்துடன் இஸ்லாமியர்கள் போல தொப்பிகள் அணிந்து கொண்டும் பரப்புரையில் ஈடுபட்டார். 


இவரது தேர்தல் பிரச்சாரம் போலவே தேர்தல்  முடிவுகளும் கவனம் பெற்றது. குந்தர்கி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்வீர் சுமார் 1.44 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  ராம்வீர் சுமார் 1.70 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். சமாஜ்வாதி வேட்பாளர் சுமார் 25,000 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பின் இந்த தொகுதியை பாஜக கைப்பற்றியுள்ளது.


இதற்கு முன்னதாக கடைசியாக பாஜக இந்த தொகுதியில் 1993ஆம் ஆண்டு தான் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த. இடைத்தேர்தல் முடிவுகள் படி, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பாஜக கணிசமான வாக்குகளை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

  • Share on

தாத்தா முன்னாள் பிரதமர்.. அப்பா மத்திய அமைச்சர்.. ஆனாலும் தேர்தலில் 3 வது முறையாக தோற்ற நிகில் - சத்திய சோதனை!

நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கு மண்டை உடைப்பு!

  • Share on