• vilasalnews@gmail.com

தேர்தல் முடிவுகள் 2024 : மகாராஷ்டிரா | ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி முன்னிலை!

  • Share on

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவ.,23) காலை 8 மணி முதல் தொடங்கி எண்ணப்பட்டு வகின்றது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜக முன்னிலை வகிக்கிறது.


மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம்

பாஜக மகாயுதி அணி - 121

காங்., மகாவிகாஸ் அகாடி - 82

( மொத்த இடங்கள் - 288 | பெரும்பான்மைக்கு - 145 )


ஜார்க்கண்ட் முன்னிலை நிலவரம்

பாஜக கூட்டணி - 39

ஜெஎம்எம் + காங்., அணி - 30

( மொத்த இடங்கள் - 81 | பெரும்பான்மைக்கு 41 )


மகாயுதி Vs மகா விகாஸ் அகாடி

மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்வர் ஏக்நாத் ஷிண்ட அணி ), தேசியவாத காங்கிரஸ் ( துணை முதல்வர் அஜித் பவார் அணி ) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா ( உத்தவ் தாக்கரே அணி ) தேசியவாத காங்கிரஸ் ( சரத் பவார் அணி ) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடியாக போட்டி நிலவுகிறது.


தற்போதைய நிலவரபட்டி 288 தொகுதிகளில் 121- ல் மகாயுதி கூட்டணியும், 82- ல் மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் முன்னிலை வகிக்கின்றன.


ஜெஎம்எம் + காங்கிரஸ் vs பாஜக கூட்டணி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கு கடந்த 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.


தற்போதைய நிலவரப்படி மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் பாஜக கூட்டணி 39 இடங்களிலும், ஆளும் ஜெஎம்எம் தலைமையிலான கூட்டணி 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

  • Share on

இனி மோடி 3.0.. அடங்காத மோடி கோஷம் | மூன்றாவது முறையாக அரியணை ஏறிய பாஜக கூட்டணி!

தாத்தா முன்னாள் பிரதமர்.. அப்பா மத்திய அமைச்சர்.. ஆனாலும் தேர்தலில் 3 வது முறையாக தோற்ற நிகில் - சத்திய சோதனை!

  • Share on