டெல்லியில் நடத்தப்பட்டு வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவுகளை வெளியிட்ட 97 சதவீத கணக்குகளை டிவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.
டெல்லியில் நடத்தப்படும் விவசாயிகள் பேராட்டம் குறித்த சர்ச்சைக்குரிய பதிவுகளை அந்த நிறுவனம் டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த டுவிட்டர் நிறுவன பிரதிநிதிகள் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிகிறது.
முன்னதாக வேளாண் விவசாயிகள் போராட்டம் காரணமாக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.