மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான போக்குவரத்து அமைச்சகம், வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான முறைகளில் அதிரடியான மாற்றங்களை விரைவில் அறிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு புதிய திருத்தங்களைக் கொண்டு வர உள்ளது. இதில் ஓட்டுனர் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள், பயிற்சி பெறுவோருக்கு சோதனைகளை நடத்தும் முறைக்கு முடிவு கட்டப்பட உள்ளது.
போக்குவரத்து உரிமம் பெற அரசு அலுவலக அதிகாரிகளிடமும், இடைத்தரகர்களிடமும் சிக்கும் முறைக்கு முடிவு கட்ட மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதே உரிமம் பெறுவதற்கான தகுதியாக இனி கருதப்படலாம்.