டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறி யிருக்கிறார் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.
சோனியாகாந்திக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவுகளால், கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நிகழ்ச்சிகளில் பெரியளவில் சோனியா கலந்துகொள்வதில்லை.
இதனால் தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என அனைத்தி நிகழ்ச்சி களையும் ராகுலும், பிரியங்காவும் மட்டுமே கவனித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே ஆஸ்துமா பாதிப்பு உடைய சோனியாவுக்கு தற்போது தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள காசு மாடுபாடு அவரை மேலும் பாதிக்கச் செய்துள்ளது.
சுவாசப்பிரச்சனை உள்ளிட்ட உடல்நலக் குறைவுகளுக்கு டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் தான் தொடர்ந்து சோனியா சிகிச்சை பெற்று வருகிறார். இந்தாண்டு மட்டும் மூன்று முறை உள் நோயாளியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சோனியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு எதிரொலியால் சோனியாவுக்கு மீண்டும் சுவாசப் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து சில நாட்கள் அவரை கோவா அல்லது சென்னைக்கு அழைத்துச் செல்லுமாறு அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் குழு அறிவுறுத்தியது.
இதன் அடிப்படையில், அவர் கோவாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு தனது தாயாருக்கு உதவிக்கரமாக இருப்பதற்காக ராகுல்காந்தியும் உடன் சென்றிருக்கிறார். பிரியங்கா காந்தி கோவா சென்றவுடன் ராகுல் டெல்லி திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.