• vilasalnews@gmail.com

காற்றின் தரம் தொடர்ந்து மோசம் : திக்குமுக்காடும் டெல்லிவாசிகள்

  • Share on

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து கடுமையாக இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

டெல்லியில் அண்மைக்காலமாக காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டி வருகிறது. டெல்லியின் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் வைக்கோல் எரிப்பில் ஈடுபட்டுள்ளதால் டெல்லியில் காற்றின் தரம் மோசமடை ந்துள்ளதாக கூறப்படுகிறது.

காற்றின் தரம் மேலும் மோசமடைவதை தவிர்ப்பதற்காக டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப் பட்டிருந்தது. ஆனால், பொதுமக்கள் தடையை மீறி பல இடங்களில் பட்டாசு வெடித்து காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.

இந்நிலையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, சிரிஃபோர்ட்டைச் சுற்றியுள்ள காற்றின் தரக் குறியீடு 287 (மோசம்) மற்றும் ஸ்ரீ அரவிந்தோ மார்க் 291 (மோசம்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(காற்று தர சுட்டெண் 251-350 வரையில் இருக்கிற போது காற்றின் தரம் மிகவும் மோசம் என்று அர்த்தம்). டெல்லியில் காற்று மாசுபாட்டால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றது.

காற்றின் தரநிலை 60 க்கு மேல் இருந்தாலே அது உடல்நலத்திற்கு கேடு. டெல்லியில் புகை மண்டலம் சூழ்ந்து பார்வையை மறைக்கும் அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டால் கண் எரிச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக டெல்லி மக்கள் புகாரளித்துள்ளனர். ஏற்கெனவே கொரோனாவால் டெல்லி திண்டாடி வரும் நிலையில் காற்று மாசு மற்றொரு தலைவலியாக உருவாகியுள்ளது.

  • Share on

பாகிஸ்தான் பயங்காரவதிகள் மீது இந்தியா துள்ளிய தாக்குதல்

டெல்லியிலிருந்து வெளியேறினார் சோனியாகாந்தி..!

  • Share on