• vilasalnews@gmail.com

கட்டுப்பாட்டை இழந்து தடுமாறிய ஹெலிகாப்டர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அமித்ஷா!

  • Share on

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகாரில் பயணம் செய்த ஹெலிகாப்டர் டேக் ஆப் ஆகும் போது கட்டுப்பாட்டை இழந்து தடுமாறியது. வானில் பறக்க முயன்ற போது லேசாக தடுமாறிய ஹெலிகாப்டர் பிறகு சீராக பறந்து சென்றது. இதனால் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பினார் அமித்ஷா.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். அந்த வகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று பீகாரின் பெகுசராய் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார்.

பின்னர், பொதுக்கூட்டம் முடிந்த பிறகு அமித்ஷா, தான் வந்து இருந்த ஹெலிகாப்டரில் புறப்பட தயாரானர். அமித்ஷா ஏறியதும் ஹெலிகாப்டர் டேக் ஆப் ஆக தயாரானது. அப்பொழுது, திடீரென அங்கு பலத்த காற்று வீசியதால் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் டேக் ஆப் ஆக முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து ஒருபக்கமாக பறந்தது.

சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்து டேக் ஆப் ஆக முடியாமல் அமித்ஷா ஹெலிகாப்டர் தடுமாறியது. இவை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில வினாடிகளில் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஹெலிகாப்டர் பறந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக எதுவும் அசம்பாவிதம் ஏற்படாததால் விபத்து எதிலும் சிக்காமல் அமித்ஷா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

  • Share on

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மு.க.ஸ்டாலின் பிரதமராவார் - இப்படி சொல்வது யார் தெரியுமா?

மீண்டும் பாஜக ஆட்சிதான்.. இத்தனை தொகுதிகளில் வெல்லுமா? - ரிபப்ளிக் வெளியிட்ட எக்சிட் போல் முடிவுகள்!

  • Share on