• vilasalnews@gmail.com

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

  • Share on

டெல்லி புதிய மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர்.

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் தான் ஏற்கனவே அம்மாநில முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.

இதையடுத்து தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி ஐகோர்ட், கெஜ்ரிவாலை கைது செய்யத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே இப்போது அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share on

நெற்றில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் மு.க.ஸ்டாலின் பிரதமராவார் - இப்படி சொல்வது யார் தெரியுமா?

  • Share on