பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் பேச மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்தாவில் பிரதமர் மோடி முன்னிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் காணப்பட்டது. பலர் மோடி மோடி என முழக்கமிட்டதால் தமது பேச்சை ரத்து செய்துவிட்டார் மம்தா பானர்ஜி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, அரசு விழாவில் பேச அழைத்து அவமதிப்பு செய்வதாக பாஜக மீது குற்றம் சாட்டினார். இது பாஜகவின் அரசியல் பொதுக்கூட்டமல்ல என்றும் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.