மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கினார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொடர்வதாக அறிவித்தாலும் மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டி என்று இன்று அறிவிப்பு வெளியிட்டார். இது காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்த நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் கொல்கத்தாவில் இருந்து மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியானது.
அதாவது, கொல்கத்தா செல்லும் வழியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கார் விவத்தில் சிக்கியதாக செய்தி வந்து இருக்கிறது.
பர்த்வான் என்ற பகுதியில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை மார்க்கமாக காரில் செல்லும் போது, மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து விட்டு காரில் சென்றார். அப்போது, அவரது கார் எதிரே வந்த மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், மம்தா பானர்ஜிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.