எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டு செயல்படுகிறது. அந்த வகையில் அக்னூர் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த தகவலை ராணுவ வட்டாரங்கள் கூறின.