• vilasalnews@gmail.com

ஜன. 29-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்; ஜன. 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: பிரதமர் மோடி அழைப்பு

  • Share on

ஜன. 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இக்கூட்டமானது காணொலி மூலம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

ஜன. 29-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் முதல்கட்டமாக 15-ம் தேதி வரையிலும், 2-ம் கட்டமாக மார்ச் 1-ம் தேதி வரையிலும் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளால் மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது. மாநிலங்களவை கூட்டம் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் கேள்விநேரம் மற்றும் பூஜ்ஜியம் நேர விவாதத்திற்கு (ஜீரோ ஹவர்) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

அதன்படி வரும் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் பாராளுமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கூறியுள்ளார். வரும் 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதேபோல் அன்றைய தினம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டமும் நடைபெற உள்ளது.

  • Share on

கொரோனா தடுப்பூசியில் இந்தியா சாதனை; முதல் நாளில் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்: இந்தியா தக்க பதிலடி

  • Share on