• vilasalnews@gmail.com

கொரோனா தடுப்பூசியில் இந்தியா சாதனை; முதல் நாளில் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

  • Share on

இந்தியாவில் முதல் நாளில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 16-ந் தேதி தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கான செலவை மத்திய அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளை விட அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு முதல் நாளில் இந்தியாவில் தடுப்பூசி போட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதை சுட்டிக்காட்டி மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

மேலும் ஒரு சாதனை. பல நாடுகளை விட இந்தியாவில் முதல் நாளில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதுவரையில் 2 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாவது நாளில் (நேற்று முன்தினம்) 6 மாநிலங்களில் 17 ஆயிரத்து 72 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • Share on

"இந்திய இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும்" - பிரதமர் மோடி ட்வீட்!

ஜன. 29-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்; ஜன. 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: பிரதமர் மோடி அழைப்பு

  • Share on