• vilasalnews@gmail.com

சி.ஏ.ஏ., சட்டத்தை நிச்சயம் செயல்படுத்துவோம்... சட்டத்தை அமல்படுத்துவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது - அமித்ஷா உறுதி

  • Share on

குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ) என்பது நாட்டின் சட்டம். அதை யாராலும் தடுக்க முடியாது. நிச்சயம் செயல்படுத்துவோம்' என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

மேற்குவங்கம் மாநிலம் தர்மதாலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: 

மற்ற நாட்டை சேர்ந்தவர் ஊடுருவும் சம்பவம் மேற்குவங்கத்தில் தான் அதிகம் நடக்கிறது. எந்த மாநிலத்தில் இவ்வளவு ஊடுருவல் நடக்கிறதோ அந்த மாநிலத்தில் வளர்ச்சி நடக்குமா? அதனால்தான் மம்தா பானர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்க்கிறார். ஆனால் சிஏஏ என்பது நாட்டின் சட்டம், அதை யாராலும் தடுக்க முடியாது; அதை நிச்சயம் செயல்படுத்துவோம்.

18 எம்.பி.,க்களையும், 77 எம்எல்ஏ.,க்களையும் வழங்கிய மேற்கு வங்க மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இங்கு அடுத்தது பா.ஜ., ஆட்சி தான் என மக்கள் முடுவு செய்துவிட்டனர். பா.ஜ., தலைவர் சுவேந்து அதிகாரியை 2வது முறையாக சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளார் மம்தா. அவரை சஸ்பெண்ட் செய்தாலும், மக்களை அமைதிப்படுத்த முடியாது.

மேற்குவங்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுவிட்டதா, அமைதி திரும்பிவிட்டதா, அரசியல் வன்முறைகள் நின்றுவிட்டதா, ஊழல்கள் நின்றுவிட்டதா என கேட்க விரும்புகிறேன். பிரதமர் மோடி மேற்குவங்கத்திற்கு லட்சங்களும், கோடிகளும் கொடுக்கிறார். ஆனால் திரிணமுல் காங்கிரஸ் கட்சி அப்பணத்தை ஏழைகளுக்கு சென்றடையவிடுவதில்லை. இங்கு 2026ல் பா.ஜ., ஆட்சி அமைய வேண்டுமானால், 2024 லோக்சபா தேர்தலில் அதன் அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  • Share on

41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு: முடிவுக்கு வந்தது மீட்பு பணி - அனைருக்கும் முதலுதவி சிகிச்சை

வாக்கு எண்ணிக்கை - சத்தீஸ்கர், ராஜஸ்தான், ம.பி.யில் பாஜக அமோகம் - தெலுங்கானாவில் காங். முன்னிலை!

  • Share on