தமிழகத்திலுள்ள கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது என்றும் ஆலயங்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது அநியாயம் என்றும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,
தமிழ்நாட்டு கோவில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளதாகவும், கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
அதே சமயம் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தளங்களை தென்னிந்திய மாநில அரசுகள் தங்கள் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்து கோவில்கள் மீது மட்டும் ஏன் இந்த கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் கோவில்களை மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி கட்சியிடம்(தி.மு.க.விடம்) கோவில்களை விடுவிக்குமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா என்று கேள்வி எழுப்பினார்.