• vilasalnews@gmail.com

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ரெடியா? ஆனா ஒரு கண்டீசன்!

  • Share on

சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம். அதுவும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையில் நாடு முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதில் சரவெடி மற்றும் பேரியம் மூலப்பொருளில் தயாராகும் பட்டாசுகளுக்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 'சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம்; அதுவும் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி. தீபாவளி அன்று நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை. ஏற்கெனவே உள்ள காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டு, பேரியம், சரவெடி தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தது. 

சில ஆண்டுகளாகத் தொடர்ந்த உத்தரவே இந்தாண்டும் நீடித்துள்ளது. இதனால், பட்டாசுத் தொழிலாளர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  • Share on

நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3 - புதிய இந்தியா உருவாகியுள்ளது

வானதி சீனிவாசன் செய்த செயல்... பிரதமர் மோடி கொடுத்த ரியாக்சன்!

  • Share on