• vilasalnews@gmail.com

பாலியல் நோக்கமின்றி கட்டிப்பிடிப்பது குற்றமல்ல - பிரிஜ் பூஷன் தரப்பு நீதிமன்றத்தில் வாதம்!

  • Share on

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அவர் "பாலியல் நோக்கமின்றி ஒரு பெண்ணைக் கட்டிப்பிடிப்பது அல்லது தொடுவது குற்றமல்ல" என்று கூறியுள்ளார்.

பிரிஜ் பூஷன் மீது 18 வயதுக்கு குறைவான சிறுமி ஒருவர் உட்பட 7 வீராங்கனைகள் பாலியில் துன்புறுத்தல் குற்றச்சாட்டை எழுப்பினர். இந்த குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் விளையாட்டுத்துறை அமைச்சகம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், உடனடியாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி மீண்டும் ஜந்தர் மந்தரில் வீராங்கனைகள்/வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தன. இதனையடுத்து பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. இதில் ஒன்று போக்சோ வழக்காகும். ஆனாலும் அவர் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் கடந்த மே மாதம் 28ம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட பெருமளவில் திரண்ட மல்யுத்த வீரர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது. மட்டுமல்லாது அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இது சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒலிம்பிக் சங்கம் உட்பட பல அமைப்புகள் இந்த விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்தன. தொடர் போராட்டம் மற்றும் சர்வதேச விளையாட்டு அமைப்புகள் கொடுத்த அழுத்தம் காரணமாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னிலையில் கடந்த 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படுவது கைவிடப்பட்டது.

இதனையடுத்து கடந்த மாதம் 15ம் தேதி டெல்லி போலீஸ் பிரிஜ் பூஷன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், பாஜக எம்பி பிரிஜ் பூஷனுக்கு கடந்த ஜூலை 18ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.25,000 ஜாமீன் தொகையாக செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். அப்போது அவரது வழக்கறிஞர் ராஜீவ் மோகன் பூஷன் தரப்பு வாதங்களை முன்வைத்தார். அதில், "இந்த குற்றங்கள் இந்தியாவுக்கு வெளியில் நடந்திருப்பதாக கூறப்படுவதால், இதை உள்நாட்டில் விசாரிக்க முடியாது. அதற்கு இந்த நீதிமன்றத்திற்கு அனுமதி கிடையாது. இந்தியாவுக்குள் நடந்ததாக மூன்று குற்றச்சாட்டுகள் மட்டுமே இருக்கின்றன.

அதில் ஒன்றுதான் கட்டிப்பிடித்ததாக கூறப்படுவது. குற்றவியல் சக்தியோ அல்லது பாலியல் நோக்கமோ இல்லாமல் ஒரு பெண்ணைத் தொடுவது குற்றமாகாது. மல்யுத்தத்தில் ஆண் பயிற்சியாளர்கள்தான் அதிகம் இருக்கின்றனர். பெண் பயிற்சியாளர்கள் குறைவு. இப்படி இருக்கையில் போட்டியில் ஒரு வீராங்கனை வெற்றி பெற்றுவிட்டால் உற்சாகத்தில் அவரை கட்டியணைப்பது குற்றமாகாது. அதேபோல தோல்வியின் போதும் ஆறுதலுக்காக கட்டிப்பிடித்தல் குற்றமாகாது" என்று கூறியுள்ளார். இதனையடுத்து விசாரணை இன்று நடைபெறும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

  • Share on

சிறந்த பிரியாணி எது?

பொதுமக்களிடமிருந்து ரூ.35 ஆயிரம் கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்..!

  • Share on