• vilasalnews@gmail.com

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா? மத்திய அரசு விளக்கம்!

  • Share on

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, உரிய சட்டத்தை இயற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

 லோக்சபாவில் சேலம் எம்பி பார்த்திபன் எழுப்பி இருந்த கேள்விக்கு, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பதில் கூறியிருப்பதாவது:-

பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகிய இரண்டுமே அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் கீழ் வருகின்றன. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டங்களை தடுப்பதற்குரிய சட்டங்களை இயற்றுவதற்கும் அவற்றை தங்களது வரம்பிற்குள் கொண்டு வருவதற்கும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கனவே சில மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள் இருந்து வருகின்றன. திறமை அடிப்படையில் வாய்ப்பு மற்றும் அதிர்ஷ்டம் அடிப்படையிலான விளையாட்டு ஆகியவற்றுக்கான வேறுபாடுகள் குறித்து உச்ச நீதிமன்றம் வகைப்படுத்தி உள்ளது.

திறமை சார்ந்த விளையாட்டுகளில் வெற்றி பெறுவதற்கு ஓரளவு திறன் தேவைப்படும் ஆனால் பெரும்பாலும் வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டுக்களை சூதாட்டம் என்றுதான் இந்திய சட்டங்கள் கருதுகின்றன இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

  • Share on

வெளிநாட்டு அரசியல் - அமைச்சர் ஜெய்சங்கர்!

சிறந்த பிரியாணி எது?

  • Share on