நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் 'பாஸ்டேக்' கட்டண நடைமுறை அமலாகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்காக மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறை கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பாஸ்டேக்' மின்னணு முறையில் அட்டைகளை, வங்கிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இதை வாங்கி, வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டினால் சுங்கச் சாவடியை, அந்த வாகனம் கடக்கும் போது, அங்குள்ள கையடக்க கருவி வாயிலாக, சுங்கக் கட்டணம் தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.