மூவர்ண தேசியக் கொடி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை மீறி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் பறக்க விடப்பட்ட தினம், ஒவ்வொரு இந்தியரின் நினைவில் நீங்க இடம்பெற்றிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
1943ஆம் ஆண்டு, டிசம்பர் 30ஆம் தேதி, அந்தமான் நிகோபாரின் போர்ட் பிளேரில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நமது நாட்டின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதன் 75ஆம் ஆண்டு தினத்தையையொட்டி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர்,
போர்ட் பிளேரில், தேசியக் கொடி ஏற்றப்பட்ட இடத்தில், நேதாஜியின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய நிகழ்வின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.