2021 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கார்களின் முன்புற இருக்கையில் ஏர்பேக் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில்,
இந்தியாவில் தயாரிக்கக் கூடிய அனைத்து விதமான புதிய வகை கார்களிலும் ஓட்டுனர் இருக்கை மட்டுமின்றி, முன்சீட்டுகளிலும் ஏர்பேக் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதை அமைக்க, பயன்பாட்டில் உள்ள கார்களுக்கு, அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதியும், புதிய ரக கார்களுக்கு ஏப்ரல் 1ம் தேதியும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த வரைவு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்தை அமைச்சகத்தின் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.