• vilasalnews@gmail.com

ஹிந்துக்கள் கத்தி வைத்திருங்கள் : பா.ஜ., எம்.பி., பிரக்யா சர்ச்சை பேச்சு

  • Share on

''நம்மை தாக்குபவர்களை திருப்பி தாக்கும் உரிமை ஹிந்துக்களுக்கு உள்ளது. எனவே, அனைவரும் வீட்டில் கத்தியை தீட்டி வைத்திருங்கள்,'' என, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., - எம்.பி., பிரக்யா சிங் தாக்குர் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்தார்.

ஹிந்து ஜாக்ரன வேதிகே அமைப்பின் தென் மண்டல மாநாடு, கர்நாடகாவின் ஷிவமோகாவில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் பங்கேற்ற பா.ஜ., - எம்.பி., பிரக்யா சிங் தாக்குர் பேசியதாவது:

'கடவுளால் படைக்கப்பட்ட இந்த உலகில், அடக்குமுறையில் ஈடுபடுபவர்கள், பாவம் செய்பவர்களுக்கு முடிவு கட்டுங்கள். இல்லை எனில் அன்பு நிலைத்திருக்காது' என, சன்னியாசிகள் கூறுகின்றனர். எனவே, 'லவ் ஜிகாத்'தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த வழியில் பதில் அளியுங்கள். உங்கள் பெண் பிள்ளைகளை பாதுகாப்புடன் வளருங்கள். அவர்களுக்கு நன்மதிப்புகளை கற்றுக் கொடுங்கள்.

ஹிந்து செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும். நம்மை தாக்குபவர்களுக்கு தக்க பதிலடி தரும் உரிமை நமக்கு உள்ளது. எனவே, ஹிந்துக்கள் அனைவரும் வீடுகளில் கத்தியை தீட்டி வைத்திருக்க வேண்டும். குறைந்தது காய்கறி நறுக்கும் கத்தியையாவது வைத்திருக்க வேண்டும்.எந்த நேரத்தில் எது நடக்கும் என தெரியாது என்பதால் எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  • Share on

மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் கையில் " லேப்டாப் "

தன்னிகரில்லா தமிழ் சமூக பெருமக்களின் பேராதரவுடன் 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும்மகிழ்ச்சி!

  • Share on