ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்துக்கள் கோவிலைத் தாக்கி அதன் மூலம் மதக்கலவரத்தைத் தூண்டிவிட முயற்சித்த தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.
போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையை அடுத்து மூன்று தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஆறு வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், முஸ்தபா இக்பால் கான் மற்றும் அவனுடைய சகோதரன் முர்தாசா இக்பால் ஆகியோர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.